/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஷம் அருந்திய முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
/
விஷம் அருந்திய முதியவர் சிகிச்சை பலனின்றி இறப்பு
ADDED : பிப் 20, 2025 09:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, பெரும்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 60; விவசாயி.
இவர், சிறுநீரக பாதிப்பிற்கு 'டயாலிஸ்' சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக, உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அவர், கடந்த 17ம் தேதி, வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், அவரை குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து, அவரது மனைவி குணா, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

