/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு பயணித்த மூதாட்டி பலி
/
ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு பயணித்த மூதாட்டி பலி
ADDED : ஜூன் 03, 2025 07:46 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த வயலுார் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 60.
இவர் நேற்று, திண்டிவனம் மார்க்கத்திலிருந்து சூணாம்பேடு நோக்கி, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்ற இளைஞரிடம், 'லிப்ட்' கேட்டுள்ளார்.
பின், இளைஞர் மூதாட்டியை ஏற்றிக்கொண்டு, தொழுப்பேடு அருகே போலமாக்குளம் பகுதியில் சென்ற போது, ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து வந்த மூதாட்டி, எதிர்பாராத விதமாக, தலைக்குப்புற கீழே விழுந்துள்ளார்.
அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான வாகன ஓட்டியை தேடி வருகின்றனர்.