/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிற்க வலியுறுத்தல்
/
படாளம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிற்க வலியுறுத்தல்
படாளம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிற்க வலியுறுத்தல்
படாளம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நிற்க வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2025 09:42 PM
படாளம்:படாளம் ரயில் நிலையத்தில், மின்சார ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுராந்தகம் அடுத்த படாளத்தில், ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே, மின்சார ரயில்கள் நின்று சென்றன. படாளம், பூதுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்றனர்.
தாம்பரத்திலிந்து, விழுப்புரம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட போது, மேற்கண்ட கிராமவாசிகள் பயனடைந்தனர். இதுமட்டுமின்றி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை பார்வையிட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ரயிலில் வந்து சென்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, மின்சார ரயில்கள் படாளம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று விடுகின்றன.
இதனால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பி உள்ளனர்.
இந்த மனு மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, கிராமவாசிகள் நலன் கருதி, மின்சார ரயில்கள் படாளத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.