தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின்வாரிய அலுவலகம் முற்றுகை

 மின்வாரிய அலுவலகம் முற்றுகை

 மின்வாரிய அலுவலகம் முற்றுகை


ADDED : ஜூலை 07, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 10:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருக்கழுக்குன்றம் ஆயர்பாடி பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்தது. ஜூன் மாதம் 24ம் தேதி, அதை அகற்றிய மின்வாரியம், மீண்டும் பொருத்தவில்லை. வேறு பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனால் இரண்டு வாரமாக, அடிக்கடி மின்னழுத்த குறைவு, மின்வெட்டு என ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்று காலையில் இருந்தே மின்வெட்டு ஏற்பட்டு, இரவும் நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், திருக்கழுக்குன்றம் மின்வாரிய அலுவலகத்தை, நேற்று இரவு 7:45 மணிக்கு முற்றுகையிட்டனர். மின்வாரிய போர்மேன் உள்ளிட்ட ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us