தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாமல்லை சிற்ப வளாகத்தில் திடீர் தீ

 மாமல்லை சிற்ப வளாகத்தில் திடீர் தீ

 மாமல்லை சிற்ப வளாகத்தில் திடீர் தீ


ADDED : ஜூலை 07, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்ப வளாக பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பற்றியது.

மாமல்லபுரத்தில், திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில், கருக்காத்தம்மன் கோவில் அருகில், பிடாரி ரதங்கள் சிற்ப வளாகம் உள்ளது.

இவ்வளாகத்தை ஒட்டியுள்ள குப்பையில், நேற்று மாலை 6:00 மணிக்கு, சிலர் தீயிட்டதாக கூறப் படுகிறது.

சிற்ப வளாகத்திற்கு வெளியே மட்டும் எரிந்து கொண்டிருந்த தீ, பின் இரவு 8:30 மணிக்கு, சிற்ப வளாகத்திற்குள் பரவி, புதரில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சிற்ப வளாகத்திற்கு வெளியே, தீயை அணைத்தனர். தொல்லியல் துறையினரை வரவழைத்து, சிற்ப வளாக நுழைவாயிலை திறந்து, அதன்பின் சிற்பங்கள் உள்ள பாறைகுன்று பகுதிக்கு பரவி கொண்டிருந்த தீயை, போராடி அணைத்தனர்.

தீ விபத்தில் சிற்பங்கள் பாதிப்பின்றி தப்பியதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் புகை பரவியதால், அப்பகுதியினர், சாலையில் சென்றவர்கள் அவதிக்குள்ளாக்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us