/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி 11ல் துவக்கம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி 11ல் துவக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி 11ல் துவக்கம்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி 11ல் துவக்கம்
ADDED : டிச 09, 2025 05:07 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள், வரும் 11ம் தேதி துவங்குகின்றன.
தமிழகத்தில், சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள், வரும் 11ம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்க உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர் நகராட்சியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சட்டசபை தொகுதி தேர்தலை எதிர்நோக்கி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள், வரும் 11ம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்கும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்பணிகளில், 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பொறியாளர்கள், பணியில் ஈடுபட உள்ளனர். மறைமலை நகர் நகராட்சி அலுவலக பகுதியில், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

