/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திடீர் உயர் அழுத்த மின் வினியோகம் வண்டலுாரில் உபகரணங்கள் பழுது
/
திடீர் உயர் அழுத்த மின் வினியோகம் வண்டலுாரில் உபகரணங்கள் பழுது
திடீர் உயர் அழுத்த மின் வினியோகம் வண்டலுாரில் உபகரணங்கள் பழுது
திடீர் உயர் அழுத்த மின் வினியோகம் வண்டலுாரில் உபகரணங்கள் பழுது
ADDED : நவ 17, 2024 09:50 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி சிங்கார தோட்டம் பகுதியில், வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகளில், திடீரென அதிக மின்னழுத்தம் கொண்ட மின் வினியோகம் செய்யப்பட்டது.
அதனால், அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குளிர்சாதன பெட்டி, டிவி, பிரிஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மறைமலை நகர் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்படி, வண்டலுார் மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, மின் கம்பத்தில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளதும், அங்கு சரியாக எர்த் ஒயர்கள் அமைக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.
மேலும், பழுதான வயர்களை மாற்றாததால், அதிக மின்னழுத்தம் கொண்ட மின் வினியோகம் நடைபெற்றதாக, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, ஒயர்களை சீரமைக்கும் பணி நடந்தது. இதனால், நேற்று காலை முதல் மதியம் வரை மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து, மதியம் 1:30 மணிக்கு சீரான மின் வினியோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.