/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பம் சாலையில் பள்ளம் சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தல்
/
நெல்லிக்குப்பம் சாலையில் பள்ளம் சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தல்
நெல்லிக்குப்பம் சாலையில் பள்ளம் சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தல்
நெல்லிக்குப்பம் சாலையில் பள்ளம் சீரமைத்து பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2024 02:04 AM

நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியின் அருகில் உள்ள சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில், இருசக்கர வாகனங்களில், வருவோர், அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி நேரங்களில், மாணவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமான சாலையை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கலாராணி, கூடுவாஞ்சேரி.
வீரபத்திரர் கோவில் குளத்தில்
கொடிகள் படரும் அவலம்
அனுமந்தபுரத்தில் வீரபத்திரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், அதிக அளவிலான பக்தர்கள் வந்து, வழிபட்டு செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், முதலில் அருகில் உள்ள கோவில் குளத்தில் நீராடி, பின் கோவிலுக்கு செல்கின்றனர். தற்போது, கோவில் குளமானது சேறும் சகதியுமாக, செடி, கொடிகள் வளர்ந்து, உரிய பராமரிப்பின்றி உள்ளது. எனவே, குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மாரியப்பன், செங்கல்பட்டு.
கூவத்துாரில் வடிகால் இல்லாததால்
சாலையில் தேங்கும் மழைநீர்
கூவத்துார் பஜார் பகுதியில் இருந்து மதுராந்தகம் செல்லும் சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலையின் ஓரத்தில், மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் சாலையில் தேங்குகிறது.
இதனால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.தினேஷ்குமார், செய்யூர்.