/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூர் சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
செம்பூர் சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
செம்பூர் சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
செம்பூர் சாலை சீரமைப்பு பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2024 12:06 AM

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே செம்பூர் - -சேவூர் இடையே செல்லும், 5 கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது. இந்த சாலையை, செம்பூர், சேவூர், கல்குளம், தண்டரை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக, சாலை பழுதடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு இருந்ததால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2022 - 23ம் ஆண்டு, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 3.78 கோடி மதிப்பீட்டில், 11 சிறுபாலங்கள், 5 இடங்களில் தடுப்புச்சுவர் மற்றும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு, சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.
பின் சாலை அமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டு, மந்த நிலையில் நடந்து வருகிறது.
இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் முதியோர் ஜல்லிக்கற்களால் சறுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவ மழைக்கு முன் சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.