/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்சாலையில் பெண்ணை தாக்கி தாலி செயின் பறித்த ஊழியர் கைது
/
தொழிற்சாலையில் பெண்ணை தாக்கி தாலி செயின் பறித்த ஊழியர் கைது
தொழிற்சாலையில் பெண்ணை தாக்கி தாலி செயின் பறித்த ஊழியர் கைது
தொழிற்சாலையில் பெண்ணை தாக்கி தாலி செயின் பறித்த ஊழியர் கைது
ADDED : மார் 02, 2024 10:28 PM

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அடுத்த, சாலமங்கலத்தைச் சேர்ந்தவர் ரோஷ்ணி, 40. இவர், ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த வாரம், இரவு பணியின்போது, உடன் பணியாற்றும் சரவணன், 45, என்பவருடன், தொழிற்சாலையின் காவலாளி அலுவலகத்தில் அமர்திருந்தார்.
அதிகாலை 3:00 மணி அளவில், அங்கு பைக்கில் வந்த மூன்று பேர், ரோஷ்ணி மற்றும் சரவணனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி, தாலி செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதில், சரவணனுக்கு, தலையில் 20 தையல் போடப்பட்டன. ரோஷ்ணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரின் படி, ஒரகடம் போலீார், 'சிசிடிவி' கேமரா காட்சியை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமலாகாந்த், 33, ப்ரமத்தாஸ், 32, மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த முகமது அனிபா, 36 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கமலாகாந்த் அதே நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்வதும், சக காவலாளியான ரோஷ்ணியின் நகைக்கு ஆசைப்பட்டு, நண்பர்களான, ப்ரமத்தாஸ், முகமது அனிபா ஆகியோருடன் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

