/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
/
செங்கையில் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 17, 2024 09:34 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், வரும் 20ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கலெக்டர் வளாகத்தில், வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 5,000 பணியிடங்களை நிரப்ப உள்ளனர். முகாமில், 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள், 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல் மற்றும் தன் விவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும்.
தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 044- 27426020 மொபைல் எண் 6383460933- 9486870577 ஆகிய எண்ணிகளில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.