/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை
ADDED : செப் 27, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்,:மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில், தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்ட அறையில் வைத்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று காலை, மாவட்ட தேர்தல் அலுவலர் அருண்ராஜ் தலைமையில், அவை சோதனை செய்யப்பட்டன. இதில், அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் போது, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன் மற்றும் மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.