/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சித்தாமூர்வாசிகள் எதிர்பார்ப்பு
/
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சித்தாமூர்வாசிகள் எதிர்பார்ப்பு
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சித்தாமூர்வாசிகள் எதிர்பார்ப்பு
உபரிநீர் கால்வாயில் தடுப்பணை சித்தாமூர்வாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 09, 2025 12:19 AM

சித்தாமூர், மதுராந்தகம் ஒன்றியம், நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியின் வாயிலாக, 400 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம்.
ஏரி, குளம், கிணறு பாசனம் போன்றவற்றின் வாயிலாக நெல், மணிலா, தர்பூசணி போன்றவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில், கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.