/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதல் டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
/
கூடுதல் டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 27, 2025 10:34 PM
சூணாம்பேடு:மதுராந்தகத்தில் இருந்து வெண்ணாங்குப்பட்டு வரை கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணாங்குப்பட்டு, இல்லீடு, காவனுார், புத்திரன்கோட்டை, நுகும்பல் போன்ற, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தொழிற்சாலை, அலுவலகங்கள், வணிக வளாகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
வெண்ணாங்குப்பட்டு முதல் மதுராந்தகம் வரை தடம் எண் 'டி-9' ஒரே ஒரு அரசு டவுன் பஸ் மட்டும் இயக்கப் படுகிறது.
காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, போக்குவரத்துறை அதிகாரிகள், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே கூடுதல் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.