/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பூரில் ரேஷன் கடை பாழ் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
செம்பூரில் ரேஷன் கடை பாழ் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
செம்பூரில் ரேஷன் கடை பாழ் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
செம்பூரில் ரேஷன் கடை பாழ் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 08:51 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செம்பூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நியாய விலை கடை உள்ளது.
இந்த ரேஷன் கடையால், 400க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 2000ம் ஆண்டு பார்லிமென்ட் உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், நியாய விலை கடை கட்டடம் அமைக்கப்பட்டது.
இந்த ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு, 23 ஆண்டுகளான நிலையில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளாததால், நாளடைவில் கட்டடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல்தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், மழைக்காலங்களில் மேல்தளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைவதாக கூறப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த நியாய விலை கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

