/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிடப்பில் சிமென்ட் சாலை பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
கிடப்பில் சிமென்ட் சாலை பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கிடப்பில் சிமென்ட் சாலை பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கிடப்பில் சிமென்ட் சாலை பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 05, 2024 11:10 PM

அச்சிறுபாக்கம்,அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், ஆனைக்குன்னம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதில் காமராஜர் தெரு சாலை மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும் குழியுமாக இருந்தது.
இந்நிலையில், அச்சிறு பாக்கம் ஊராட்சி ஒன்றிய கனிமவள நிதி 2022 -- 2023ன் கீழ், ஆனைக்குன்னம் ஊராட்சிக்கு, 60 மீட்டர் நீளம் சிமென்ட் சாலை அமைக்க, 3.16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெறாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், முதியவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சிமென்ட் சாலை பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.