/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லிப்பாக்கம் - நல்லுார் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
/
வில்லிப்பாக்கம் - நல்லுார் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
வில்லிப்பாக்கம் - நல்லுார் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
வில்லிப்பாக்கம் - நல்லுார் சாலை விரிவாக்கம் செய்ய எதிர்பார்ப்பு
ADDED : பிப் 05, 2025 12:44 AM

சூனாம்பேடு:சூனாம்பேடு அருகே வில்லிப்பாக்கம் கிராமத்தில் இருந்து வெடால் வழியாக நல்லுார் செல்லும், 16 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இது கடுக்கலுார், வெடால், சித்தார்காடு, இரும்பேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை.
தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் விவசாய பணிக்குச் செல்லும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
விவசாய நிலங்களுக்கு மத்தியில் இச்சாலை செல்வதால் டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
தற்போது அமைக்கப்பட்டு உள்ள தார்ச்சாலை குறுகி உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொண்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
வளைவுப் பகுதிகளில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.