/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திண்டிவனம்-மதுராந்தகம் இடையே அரசு பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
/
திண்டிவனம்-மதுராந்தகம் இடையே அரசு பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
திண்டிவனம்-மதுராந்தகம் இடையே அரசு பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
திண்டிவனம்-மதுராந்தகம் இடையே அரசு பேருந்து இயக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 03, 2025 10:55 PM
சித்தாமூர்:திண்டிவனம்- மதுராந்தகம் இடையே சூணாம்பேடு வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான சூணாம்பேடு, புத்திரன்கோட்டை, நுகும்பல் போன்ற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவியர், பகுதி மக்கள் திண்டிவனம், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் கடலில் பிடிக்கப்படும் கடல்சார் உணவுப்பொருட்களை விற்பனை செய்ய, மீனவர்கள் திண்டிவனம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
திண்டிவனம் பகுதியில் தினசரி காய்கறி மற்றும் மலர் சந்தை செயல்படுவதால், சூணாம்பேடு பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் தினசரி நுாற்றுக் கணக்கான மக்கள் திண்டிவனம் சென்று வருகின்றனர்.
திண்டிவனம்-மதுராந்தகம் இடையே சூணாம்பேடு வழியாக பேருந்து வசதி இல்லாததால், திண்டிவனம் செல்ல மக்கள் 2 முதல் 3 பேருந்துகள் வரை மாறி, மாறி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது.
ஆகையால் துறைசார்ந்த அதிகாரிகள் ஆய்வுசெய்து, சூணாம்பேடு வழியாக திண்டிவனம்-மதுராந்தகம் இடையே அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.