/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்மட்ட நடைபாலத்தில் 'லிப்ட்'களை இயக்க எதிர்பார்ப்பு
/
உயர்மட்ட நடைபாலத்தில் 'லிப்ட்'களை இயக்க எதிர்பார்ப்பு
உயர்மட்ட நடைபாலத்தில் 'லிப்ட்'களை இயக்க எதிர்பார்ப்பு
உயர்மட்ட நடைபாலத்தில் 'லிப்ட்'களை இயக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 14, 2025 10:28 PM

வண்டலுார்: தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையை, தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது.
இதில், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான 18 கி.மீ., துார ஜி.எஸ்.டி., சாலையில், ஏழு இடங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.
இந்த பேருந்து நிறுத்தங்களில், சாலையின் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கு பொதுமக்கள் செல்ல, சாலையின் நடுவே உள்ள மையத்தடுப்பு சுவரை கடக்க வேண்டும்.
இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், குறிப்பிட்ட ஏழு இடங்களிலும், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடைபாலம் அமைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வண்டலுார் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் டெக் பார்க், வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய ஏழு இடங்களில், உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2024ல் பணிகள் துவங்கப்பட்டன.
இதில், சிங்கபெருமாள் கோவில் தவிர்த்து, மற்ற ஆறு இடங்களில் உள்ள உயர்மட்ட நடைபாலம் கட்டுமான பணிகள், கடந்த ஆக., மாதம் முடிந்து, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், உயர்மட்ட நடைபாலத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டுள்ள மின் துாக்கிகளை, இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.
இதனால், மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விரைவில் இந்த மின் துாக்கிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

