/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாலிபர் கொலை வழக்கில் டி.எஸ்.பி., ஆபீசில் மூவர் சரண்
/
வாலிபர் கொலை வழக்கில் டி.எஸ்.பி., ஆபீசில் மூவர் சரண்
வாலிபர் கொலை வழக்கில் டி.எஸ்.பி., ஆபீசில் மூவர் சரண்
வாலிபர் கொலை வழக்கில் டி.எஸ்.பி., ஆபீசில் மூவர் சரண்
ADDED : நவ 14, 2025 10:27 PM
செங்கல்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா பெருமாட்டுநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக பாண்டியன், 27.
இவர், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தங்கி, செங்கல்பட்டிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 'கலெக் ஷன் ஏஜன்டாக' வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு, செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், 30, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சண்முக பாண்டியன் இரு ஆண்டுகளுக்கு முன் மதியழகனிடம், தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, முன்பணமாக 30,000 ரூபாய் வாங்கி உள்ளார்.
ஆனால், கடன் வாங்கித் தராமலும், முன்பணத்தை திரும்ப தராமலும் சண்முக பாண்டியன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த மதியழகன் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், சண்முக பாண்டியனை வல்லம் பகுதியிலுள்ள காலி இடத்திற்கு வரவழைத்து, தன் நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து, சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.
தகவலின்படி சென்ற சண்முக பாண்டியனின் நண்பர்கள், அவரை செங்கல்ப ட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித் து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, செங்கல்பட்டு டி.எஸ்.பி., அலுவலகத்தில், டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் முன்னிலையில் மதியழகன் மற்றும் அவரது நண்பர்களான சூர்ய பிரகாஷ், 18, சஞ்சய், 20, ஆகியோர் சரணடைந்தனர்.
மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

