/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி விறுவிறுப்பு
/
வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி விறுவிறுப்பு
வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி விறுவிறுப்பு
வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி விறுவிறுப்பு
ADDED : நவ 14, 2025 10:27 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் சினேகா அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சோழிங்கநல்லுார் , பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறும் பணியும் நடந்து வருகிறது. வாக்காளர்கள், 2002 - 2005ம் ஆண்டுகளின் முந்தைய தீவிர திருத்தத்தில் விபரங்கள் மற்றும் உறவினர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியின் பாகம் எண், வரிசை எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய (https;//erolls.tn.gov.in/ electoralsearch/ என்ற இணையதளத்தில் தகவல் அறிந்து கொள்ளலாம் அல்லது ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கேட்டறிந்து கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்ப டி விபரங்களை வாக்காளர்கள் https;//voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில், தாங்களாகவே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இப்பணிகள், வரும் டிச., 4ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

