/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பஜார் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
/
செய்யூர் பஜார் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
செய்யூர் பஜார் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
செய்யூர் பஜார் கூட்டுச்சாலையில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 22, 2025 12:08 AM

செய்யூர், செய்யூர் பஜார் கூட்டுச் சாலையில், பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பஜார் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
ஓதியூர், முதலியார்குப்பம், நல்லுார், அம்மனுார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், செய்யூர் பஜார் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
செய்யூர் அரசு மருத்துவமனை அருகே, பேருந்து நிலையம் செயல்படுகிறது. 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
மதுராந்தகத்தில் இருந்து எல்லையம்மன் கோவில், கடப்பாக்கம், கொளத்துார் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் நேரடியாக இயக்கப்படுவதால், பொதுமக்கள் கடைகளுக்கு சென்றுவர ஏதுவாக உள்ளதால், செய்யூர் பஜார் கூட்டுச் சாலையை பேருந்து நிறுத்தமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால், பஜார் கூட்டுச் சாலையில் பேருந்து நிறுத்த நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் செய்யூர் கூட்டுச் சாலை பகுதியில், பழைய காவல் நிலையம் இருந்த இடத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.