/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள் தரவு சேகரிப்பு முகாம் கால நீட்டிப்பு
/
விவசாயிகள் தரவு சேகரிப்பு முகாம் கால நீட்டிப்பு
ADDED : ஜூன் 30, 2025 11:30 PM
மதுராந்தகம், மதுராந்தகம் வட்டாரத்தில், விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம், வரும் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் வட்டாரத்தில், கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை, விவசாயிகள் தரவு சேகரிக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதுவரை, 6,903 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தனிப்பட்ட விவசாயி எண் தொடர்பான விவசாயிகள் தரவு சேகரிக்கும் இந்த முகாம், வரும் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் வட்டாரத்தைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும்.
நில உடமை பட்டா நகல், ஆதார் அட்டை நகல், வகுப்பு சான்று நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பதிவு செய்யலாம்.