/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
/
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ADDED : செப் 29, 2024 12:16 AM

கூடுவாஞ்சேரி:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், வார விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று கிளம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு, குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வதற்கு பயணியர் படையெடுத்தனர்.
இது குறித்து, கிளாம்பாக்கம் பேருந்து முனைய அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகள் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, வழக்கமாக 1,276 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வார விடுமுறை நாட்களில், பயணியர் வருகைக்கு ஏற்ப, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து முனையத்திற்கு வரும் பயணியரை, உடனுக்குடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.
நேற்றும், இன்றும் வழக்கத்தை விட அதிகமான பயணியர் வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகமான பயணியர் வரவில்லை.
வழக்கமான நாட்களில், தினமும் 30,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் வருகின்றனர். அவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, நேற்று 350 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணியர் வருகையை பொறுத்து, இன்னும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேருந்து முனையத்திற்கு வரும் பயணியருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கிட, கிளாம்பாக்கம் போலீசாருக்கு கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் உத்தரவிட்டுள்ளார்.