/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம் செம்பாக்கத்தில் 6 மணி நேரம் இருள்

ADDED : டிச 03, 2025 06:20 AM

செம்பாக்கம் : தொடர் மழையின் காரணமாக, செம்பாக்கத்தில் 30 வருட மரம் ஒன்று, சாலையில் அடியோடு சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால், அப்பகுதியில் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
'டிட்வா' புயல் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம், வி.ஜி.பி., சீனிவாசா நகர், 2வது தெருவில் இருந்த 30 வருட பழமையான மரம் ஒன்று, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அடியோடு சாய்ந்தது. இதில், மரத்தின் அருகில் இருந்த மூன்று மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, காலை 6:00 மணிக்கு மின் சப்ளை நிறுத்தப்பட்டு, சேதமடைந்த மின் கம்பங்களை சரிசெய்யும் பணியும், சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும் துவங்கின.
இதன் காரணமாக, வி.ஜி.பி., சீனிவாசா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆறு மணி நேரம் மின் தடை ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.