/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையத்தில் 'வசூல்' விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு
/
நெல் கொள்முதல் நிலையத்தில் 'வசூல்' விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் நிலையத்தில் 'வசூல்' விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் நிலையத்தில் 'வசூல்' விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு
ADDED : செப் 19, 2025 10:32 PM
செங்கல்பட்டு:அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யும் போது லஞ்சம் கேட்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, சப் - கலெக்டர் மாலதி ஹெலன், வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல மேலாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், கயப்பாக்கம் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு, விவசாயிகள் நெல் விற்பனை செய்கின்றனர். 40 கிலோ மூட்டை நெல்லிற்கு, 41.50 கிலோ நெல் எடை எடுக்கின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து, கூடுதல் எடையில் நெல் எடுக்கப்படுகிறது.
இதில், 40 கிலோ மூட்டைக்கு, 50 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தாரர்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுராந்தகம் பகுதியில் மழை பெய்தால், ஐந்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஆளும் கட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தனிநபர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.
இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்க்க, குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.