/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதலுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் விரக்தி
/
நெல் கொள்முதலுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் விரக்தி
நெல் கொள்முதலுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் விரக்தி
நெல் கொள்முதலுக்கு பணம் வழங்காததால் விவசாயிகள் விரக்தி
ADDED : மே 11, 2025 01:36 AM
திருக்கழுகுன்றம்:வழுவதுாரில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து ஒரு மாதமாகியும் பணம் கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் சுற்று வட்டார பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. வழுவதுாரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் விற்ற நெல்லுக்கான தொகையை விவசாயிகள் கணக்கில் ஒரு மாதமாக வரவு வைக்காமல் வைத்துள்ளனர்.
இதனால், விவசாயிகள் நெல் சாகுபடிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விரக்தியில் உள்ளனர்.
எனவே நிலுவையில் உள்ள கொள்முதலுக்கான பணத்தை விவசாயிகள் கணக்கில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.