/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தர்ப்பூசணி விலை கிடுகிடு உயர்வு செய்யூர் விவசாயிகள் மகிழ்ச்சி
/
தர்ப்பூசணி விலை கிடுகிடு உயர்வு செய்யூர் விவசாயிகள் மகிழ்ச்சி
தர்ப்பூசணி விலை கிடுகிடு உயர்வு செய்யூர் விவசாயிகள் மகிழ்ச்சி
தர்ப்பூசணி விலை கிடுகிடு உயர்வு செய்யூர் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 18, 2024 03:07 AM

செய்யூர் : செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயமே பிரதான தொழில். 5,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், கிணற்றுப் பாசனத்தில் சொட்டு நீர் பாசன முறையில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.
இப்பகுதியில், அறுவடை செய்யப்படும் தர்ப்பூசணி, சென்னை, கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
செய்யூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்ப்பூசணி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, விவசாயி மேகநாதன் கூறியதாவது:
செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதியில், 5,000 ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஜன., மாதம் பெய்த திடீர் மழையால் தர்ப்பூசணி பயிர்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் குறைந்த அளவில் இருந்ததால், விவசாயிகள் கவலைப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சில தினங்களாக, டன் ஒன்று 12,000 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்போது, நாம்தாரி ரக தர்ப்பூசணி 15,000 முதல் 17,000 ரூபாய் வரையும், விஷால் ரக தர்ப்பூசணி, 18,000 முதல் 20,000 ரூபாய் வரையும், அக்ஷய் ரக தர்ப்பூசணி, 17,000 முதல் 20,000 ரூபாய் வரையும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

