/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிகளில் மண் எடுப்பதை நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
/
ஏரிகளில் மண் எடுப்பதை நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
ஏரிகளில் மண் எடுப்பதை நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
ஏரிகளில் மண் எடுப்பதை நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
ADDED : ஜூலை 25, 2025 10:09 PM
செங்கல்பட்டு:வண்டலுார் தாலுகாவில் உள்ள ஏரிகளில் மண் எடுப்பதை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நடந்தது.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
வண்டலுார் அடுத்த ஒத்திவாக்கம் ஏரியில் இருந்து, அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுக்கப்படுகிறது. வண்டலுார் தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளிலும், அனுமதித்த 3 அடிக்கும் மேல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது.
இதனால், ஏரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. ஏரிகளில் மண் எடுப்பதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில், கால்நடை மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் சரியாக வராததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் எற்படுகிறது. கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணி செய்வதை, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
கனிமவளத் துறை அதிகாரி: ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் ஏரியில் தனியார் நிறுவனம் மண் எடுக்க, அனுமதி வழங்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் வெட்டி எடுத்தால், விவசாயம் பாதிக்கப்படும்.
இதனால், மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் கலெக்டர் சினேகா ஆகியோரிடம், கிராமத்தினர் மனு அளித்தனர்.
'இம்மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்தார்.