/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 05:52 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் தாலுகாவில், 'உழவர் அலுவலர் தொடர்பு' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நேற்று, வேளாண் துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பொறியியல் துறை, வேளாண் வணிகம் என அனைத்து துறையின் அரசு திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் -2.0' என்ற திட்டத்தை செயல்படுத்த, வேளாண் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, நான்கு கிராமங்களுக்கு ஒரு அலுவலரை நியமிக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து துறை தொடர்பான உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை இவர்கள் வழங்க வேண்டும் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால், வேளாண் படிப்பு படித்த அலுவலர்கள், தோட்டக்கலை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு உதவுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது.
அனைத்து துறை திட்டங்களையும், அனைத்து துறை தொழில் முறைகளையும், ஒரு அலுவலரே விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது, விவசாயிகளுக்கு தவறான தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
இதனால், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், மதுராந்தகம் வேளாண்துறை அலுவலகத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாயிகள் திரளானோர் பங்கேற்று, இத்திட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

