/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 17, 2025 01:56 AM

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு நெல் கொள்முதல் செய்ய, மத்திய, மாநில அரசின் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 21 மத்திய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள, மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, 25,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
ஆனால், இதற்கான பணம் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் நேற்று, மின்னல் சித்தாமூர் மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுபாக்கம் போலீசார், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். அதன் பின், விவசாயிகள் கலைந்து சென்றனர்.