/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சந்தை வளாகத்தில் பன்றிகள் தொல்லை வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
சந்தை வளாகத்தில் பன்றிகள் தொல்லை வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
சந்தை வளாகத்தில் பன்றிகள் தொல்லை வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
சந்தை வளாகத்தில் பன்றிகள் தொல்லை வேலி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : அக் 19, 2024 01:33 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு சொந்தமான, 4.5 ஏக்கர் நிலம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் உள்ளது. இந்த காலி இடத்தில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது.
அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றையும், வெளியூர் பகுதி வியாபாரிகள் காய்கறிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், சிறிய அளவிலான கடைகளுக்கு 25 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சந்தை வளாகத்தை சுற்றிலும், முட்புதர்கள் அடர்ந்துள்ளன. பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், சந்தை வளாகத்தின் அருகிலேயே கொட்டி வைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, அப்பகுதியில் உலா வரும் பன்றிகள், சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கழிவுகளை உண்ணுகின்றன. முட்புதர்கள் அடர்ந்துள்ளதால், பன்றிகள் தங்குமிடமாக சந்தை வளாகம் மாறியுள்ளது.
மழைக்காலம் என்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
எனவே, சந்தை வளாகத்தைச் சுற்றி, இரும்பு கம்பி வேலி அமைத்து தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.