/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 26, 2025 01:58 AM

செங்கல்பட்டு:விவசாய பயன்பாட்டிற்கு வேளாண்மை பொறியியல் துறை டிராக்டர்கள் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நடந்தது. சப்- கலெக்டர் நாராயணசர்மா, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வணிபகழக மண்டல மேலாளர் ரேணுகாம்பாள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயம் தொடர்புடைய 120 மனுக்கள் வரப்பெற்றன, இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், எஸ்.ஆர்.எம்., வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று தெரிந்து கொண்டனர்.
விவசாயிகள் பேசியதாவது:
வேளாண்மை பொறியியல்துறையினர், விவசாய பணிக்கு, டிராக்டர்கள் வழங்க வேண்டும். பெரும்பாலன விவசாயிகளுக்கு டிராக்டர் கிடைப்பதில்லை. அனைவருக்கும் டிராக்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுராந்தகம் பகுதியில், மின் அழுத்த குறைந்த அழுத்த மின்சாரம் வருவாதல், மின் மோட்டார்க்ள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. ஆயப்பாக்கம் பகுதியிலும் மின் அழுத்த குறைபாடு உள்ளது. மின்வாரியம் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.