/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
/
தேசிய அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 30, 2025 11:16 PM
செங்கல்பட்டு:தேசிய அளவிலான அடையாள எண் பெற, விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி வெளியிட்ட செய்தி குறிப்பு:
விவசாயிகள் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் மானியம் உள்ளிட்ட பலன்களை பெற்று வருகின்றனர்.
தற்போது, இந்த பலன்களை பெற, ஆதார் எண் போன்று தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. மேலும், 'பி.எம்.கிசான்' திட்டத்தில் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கும், இந்த தேசிய அளவிலான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதன்படி செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், ஒவ்வொரு வருவாய் கிராமங்களில் வேளாண்மை - உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று, நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்த பின், விவசாயிகளுக்கு தேசிய அளவிலான அடையாள எண் கொண்ட அட்டை வழங்கப்படும். இந்த அறிவுறுத்தலே பதிவு செய்ய கடைசி வாய்ப்பு.
எனவே, விவாயிகள் தவறாமல் முகாம்களில் பங்கேற்று, தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் பெற பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.