/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆற்று மணல் கடத்தல் தந்தை கைது; மகன் ஓட்டம்
/
ஆற்று மணல் கடத்தல் தந்தை கைது; மகன் ஓட்டம்
ADDED : மார் 18, 2025 12:37 AM
சூணாம்பேடு; சூணாம்பேடு அடுத்த ஈசூர் கிராமத்தில் உள்ள ஓங்கூர் ஆற்றில், மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடப்பதாக, சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஓங்கூர் ஆற்றுப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த இருவரை மடக்கினர். அதில், ஈசூர் கிராமத்தை சேர்ந்த மார்க்கண்டேயன், 55, பிடிபட்டார். அவரது மகன் பிரகாஷ், 26, தப்பியோடினார்.
பின், வழக்குப்பதிந்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, மார்க்கண்டேயனை செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். தப்பியோடிய பிரகாஷை, போலீசார் தேடி வருகின்றனர்.