/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுவனுக்கு சூடுவைத்த தந்தை, சித்தியிடம் விசாரணை
/
சிறுவனுக்கு சூடுவைத்த தந்தை, சித்தியிடம் விசாரணை
ADDED : செப் 10, 2025 10:08 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே, சிறுவனுக்கு சூடு வைத்த தந்தை மற்றும் சித்தியிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர்.
இதில், சிறுவனின் தாய் கணவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவனின் தந்தையும் சித்தியும் சேர்ந்து, சிறுவனை கடந்த சில நாட்களாக தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரிந்தது.
இதையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார், மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
தற்போது சிறுவனுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.