/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான உயர்கோபுர மின்விளக்கு அந்தரத்தில் தொங்குவதால் அச்சம்
/
பழுதான உயர்கோபுர மின்விளக்கு அந்தரத்தில் தொங்குவதால் அச்சம்
பழுதான உயர்கோபுர மின்விளக்கு அந்தரத்தில் தொங்குவதால் அச்சம்
பழுதான உயர்கோபுர மின்விளக்கு அந்தரத்தில் தொங்குவதால் அச்சம்
ADDED : செப் 14, 2025 02:18 AM

மறைமலை நகர்:திருப்போரூர் கூட்டுச்சாலையில், பழுதடைந்து அந்தரத்தில் தொங்கும் உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கப்பட்டு -- திருப்போரூர் நெடுஞ்சாலை 25 கி.மீ., உடையது. சுற்றுப்பகுதி கிராம மக்கள் செங்கப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை, 2019ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட போது, நெடுஞ்சாலைத் துறை சார்பில், திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
நாளடைவில் முறையாக பராமரிக்கப்படாமல், கடந்த சில ஆண்டுகளாக இந்த உயர் கோபுர மின் விளக்கு பழுதடைந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், இரண்டு மாதங்களுக்கு முன், இச்சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை பழுது நீக்கும் பணிகள் துவங்கின. ஆனால், இதுவரை இந்த உயர் கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருப்போரூர் கூட்டுச்சாலையில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டதில் இருந்து, விபத்து மற்றும் வழிப்பறி அச்சமின்றி வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சென்று வந்தனர்.
தற்போது இந்த பகுதியில் மின் விளக்கின்றி, இரவு நேரத்தில் இருள் சூழ்வதால், அச்சத்துடன் சென்று வரும் நிலை தொடர்கிறது. மேலும், இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து அந்தரத்தில் தொங்குவதால், பலத்த காற்று வீசும் போது, வாகன ஓட்டிகள் மீது விழும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.