/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் அச்சம்
/
அபாய நீர்த்தேக்க தொட்டி அச்சிறுபாக்கத்தில் அச்சம்
ADDED : டிச 04, 2024 11:13 PM

அச்சிறுபாக்கம்,
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 15வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுகிராமம் சாலையில், வீடுகள் நிறைந்த பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.
அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றி, குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் துாண்களின் அடிப்பகுதியில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உறுதி தன்மையை இழந்து உள்ளது.
இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, 80 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டது என்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுமென, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.