/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கயிறு கட்டாமல் எடுத்து செல்லும் சிமென்ட் குழாய்களால் அச்சம்
/
கயிறு கட்டாமல் எடுத்து செல்லும் சிமென்ட் குழாய்களால் அச்சம்
கயிறு கட்டாமல் எடுத்து செல்லும் சிமென்ட் குழாய்களால் அச்சம்
கயிறு கட்டாமல் எடுத்து செல்லும் சிமென்ட் குழாய்களால் அச்சம்
ADDED : அக் 06, 2025 01:38 AM

மறைமலை நகர்:மறைமலை நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக கொண்டு செல்லப்படும் சிமென்ட் குழாய்கள், கயிறு கட்டாமல் கொண்டு செல்லப்படுவதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில், ஆறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
விடுபட்ட 15 வார்டுகளிலும், புதிதாக பாதாள சாக்கடை அமைக்க, கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது காட்டாங்கொளத்துார், கோவிந்தாபுரம், திருக்கச்சூர், பேரமனுார், ரயில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய சிமென்ட் குழாய்கள் லாரிகளில் எடுத்துச் சென்று, சாலை ஓரங்களில் இறக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு லாரிகளில் பெரிய குழாய்களை எடுத்துச் செல்லும் போது கயிறு மற்றும் 'பெல்ட்' வாயிலாக கட்டாமல், சிமென்ட் குழாய்கள் நிற்க வைத்து ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இந்த குழாய்கள் முக்கிய நெடுஞ்சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இறக்கி வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழாய்களை கொண்டு செல்லும் போது, கயிறு கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.