/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் உலவுவதால் அச்சம்
/
வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் உலவுவதால் அச்சம்
வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் உலவுவதால் அச்சம்
வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் விஷ ஜந்துக்கள் உலவுவதால் அச்சம்
ADDED : டிச 14, 2024 11:34 PM

மறைமலைநகர்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் தடத்தில், வில்லியம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது.
திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், இந்த ரயில் நிலையத்தில் தினமும் நின்று செல்லும்.
வில்லியம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், சீத்தனஞ்சேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ரயில் நிலையத்தில் கூரை, இருக்கைகள் போன்றவை முறையாக இல்லை. இதனால், பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
தினமும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தாம்பரம், மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களுக்கு, அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் பயணியர் சென்று வருகின்றனர். ஆனால் இந்த ரயில் நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. போதிய அளவு இருக்கைகள் மற்றும் கூரைகள் இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் அவதிப்படுகின்றனர்.
ரயில்வே நடைபாதை முழுதும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. பல இடங்களில் நடைபாதை உடைந்து காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது.
இதனால், பயணியர் அச்சத்துடனேயே ரயிலுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, வில்லியம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி, புதரை அகற்றி துாய்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.