/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பென்னலுார் துணைமின் நிலையத்தில் தீ
/
பென்னலுார் துணைமின் நிலையத்தில் தீ
ADDED : மார் 14, 2024 10:35 PM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே, பென்னலுார் துணைமின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், துணைமின் நிலைய வளாகத்தில் பராமரிப்பு இல்லாததால், அதிக அளவில் புற்செடிகள், முட்செடிகள், கொடிகள் வளர்ந்து உள்ளன. அதில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
காய்ந்த செடிகளில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து மின் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இருங்காட்டுக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனார்.
இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

