/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மெத்தை தயாரிப்பு கிடங்கில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
/
மெத்தை தயாரிப்பு கிடங்கில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
மெத்தை தயாரிப்பு கிடங்கில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
மெத்தை தயாரிப்பு கிடங்கில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்
ADDED : பிப் 21, 2025 12:00 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மேட்டுத்தெரு அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் தெருவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில், கிடங்கு அமைத்து, அதில் மெத்தை தயாரிக்கும் மூலப்பொருட்களான பஞ்சு உள்ளிட்ட பொருட்களை, நுாருல்லா,50. என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த கிடங்கில், நேற்று காலை 10:30 மணியளவில், திடீரன தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கின் நான்கு புறங்களிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
தகவலறிந்த காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், நேரில் சென்று தீயை அணைத்தனர். அப்பகுதி முழுதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.
தண்ணீர் பீய்ச்சி அடித்து மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், கிடங்கில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. மின்கசிவு ஏற்பட்டதா அல்லது சதியா என, விபத்து நடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.