/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
/
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : செப் 30, 2025 01:10 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், பாலித்தீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
மறைமலை நகர் சிப்காட் பகுதியில், பெரிய அளவிலான பாலித்தீன் பைகள் தயாரிக்கும், 'பென்ஸ் பேக்கேஜிங் சொல்யூஷன்ஸ்' எனும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில், 40க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், மோட்டார் 'சுவிட்ச்'சை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி உள்ளது.
தீ மளமளவென தொழிற்சாலை முழுதும் பரவி எரிந்து, கரும்புகை வெளியேறியுள்ளது.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, சிறுசேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம், செங்கல்பட்டில் இருந்து இரு வாகனம் என, ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.
அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால், மறைமலை நகர் பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து, மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.