/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீ தொண்டு வார விழா செங்கையில் விழிப்புணர்வு
/
தீ தொண்டு வார விழா செங்கையில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 15, 2025 06:39 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், தீ தொண்டு நாள் வாரத்தையொட்டி, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அருண்ராஜ், துவக்கி வைத்தார்.
இதில், துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், மகேந்திரா வேர்ல்டு சிட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, தீயணைப்பு அலுவலகம் அருகில், நிறைவடைந்தது. இந்த பேரணியில், சமையல் அறையில் தாழ்வான கூரை இருத்தல் கூடாது.
சமையல் செய்யும் போது, காட்டன் துணிகளை உடுத்த வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் முதலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் உள்ளிட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனர்.

