/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் தீ தடுப்பு விழிப்புணர்வு
/
மறைமலை நகரில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஏப் 17, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் தீயணைப்பு நிலையம் சார்பில், தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தீ விபத்தின் போது தீ அணைப்பானை எப்படி பயன்படுத்துவது, அவசர காலங்களில் சமயோசிதமாக முடிவு எடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நேரடி பயிற்சி அளித்தனர். தொடர்ந்து துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.