/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீ தடுப்பு தெற்குபட்டில் விழிப்புணர்வு
/
தீ தடுப்பு தெற்குபட்டில் விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், தெற்குபட்டு கிராமத்தில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த விழிப்புணர்வில், தீபாவளி - தீ விபத்தில்லாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப் பட்டது.
இதேபோல, திருப்போரூர் அடுத்த காலவாக்கம் தீயணைப்பு நிலையத்தில், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம், காலவாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைராஜ் தலைமையில் நடந்தது.