/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 12, 2025 10:27 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் சினேகா அறிக்கை:
கடந்த 1ம் தே தி முதல் வரும் டிச., 31ம் தேதி வரையிலான காலாண்டிற்கு, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி, பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, கடந்த செப்., 30ம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு, உதவித்தொகை வழங்கப் படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு முடிந்திருந்தால் போதுமானது. விண்ணப்பங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பெற்று, வரும் டிச., 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.