/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்
/
மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்
மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்
மாமல்லை சிற்ப வளாகங்களில் முதலுதவி மருந்துகள் அவசியம்
ADDED : பிப் 05, 2025 01:53 AM
மாமல்லபுரம்மாமல்லபுரம் சிற்ப வளாகங்களில் கீழே விழுந்து காயமடையும் பயணியருக்காக, முதலுதவி சிகிச்சை மருந்துகள் வைக்க வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு ஆகியவற்றை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
சிற்ப வளாக பகுதிகளில், சமனற்ற பாறை குன்றுகளில் பயணியர் நடக்கும் போது, அடிக்கடி கால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இவ்வாறு காயமடையும் பயணியருக்கு, உடனே முதலுதவி சிகிச்சை அளிக்க, தொல்லியல் துறையினரிடம் முறையான மருந்துகள் இல்லை.
இதனால், பயணியருக்கு அதிக ரத்தம் வெளியேறி, மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லும் அவலம் தொடர்கிறது.
எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி, சிற்ப வளாக நுழைவுச்சீட்டு மையங்களில், முதலுதவி மருந்துகள் வைத்திருக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.