/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன் வலை பாதுகாப்புக்கூடம் ஆலம்பரைக்குப்பத்தில் அவசியம்
/
மீன் வலை பாதுகாப்புக்கூடம் ஆலம்பரைக்குப்பத்தில் அவசியம்
மீன் வலை பாதுகாப்புக்கூடம் ஆலம்பரைக்குப்பத்தில் அவசியம்
மீன் வலை பாதுகாப்புக்கூடம் ஆலம்பரைக்குப்பத்தில் அவசியம்
ADDED : ஆக 19, 2025 12:15 AM

செய்யூர், ஆலம்பரைக்குப்பத்தில், மீன் வலை பாதுகாப்புக்கூடம் அமைத்து தர வேண்டுமென, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நாட்டுப்படகு மூலமாக கடலுக்குச் சென்று மீன் பிடித்தல் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது, இவர்களின் பிரதான தொழில்.
தினமும், 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மூலமாக கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் பல ஆண்டுகளாக, மீன் வலை பாதுகாப்புக்கூடம் இல்லாமல், திறந்தவெளியில் வலைகளை வைப்பதால், வெயில் மற்றும் மழையில் வீணாகி, அறுந்து விடுகின்றன. இதனால், அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுகிறது.
மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில், மீன் வலைகள் கடலுக்குள் செல்லும் நிலை தொடர்கிறது.
மேலும், இங்கு வலை பின்னும் கூடம் இல்லாததால், கிழிந்த வலைகளை பின்ன இடவசதி இல்லாமல், சிரமப்பட்டு வருகிறோம். மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலம்பரைக்குப்பம் பகுதியில் வலை பாதுகாப்பு மையம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.