ADDED : ஜன 13, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்தவர் கதிர்வேல், 44; மீனவர்.
இவர், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் படகில், நேற்று காலை 6:00 மணியளவில், சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார்.
அப்போது, திடீரென படகு கவிழ்ந்து, நீரில் விழுந்த கதிர்வேலை உடனிருந்தோர் மீட்டு, கோவளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் அவரை பரிசோதித்து, ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.